நாட்டில் பால்மா தட்டுப்பாடு…

நாட்டில் பால்மா தட்டுப்பாடு : விநியோகஸ்தரின் களஞ்சியசாலை முன்னாள் திரண்ட மக்களை கட்டுப்படுத்த களமிறங்கிய சுகாதாரத்துறை மற்றும் பாதுகாப்பு படையினர் !

நிந்தவூரில் உள்ள வெளிநாட்டு தயாரிப்பு பால்மா விநியோகஸ்தரின் களஞ்சியசாலை முன்னாள் திரண்ட மக்கள் பால்மா தருமாறு கோரி நீண்ட வரிசையில் சமூக இடைவெளி எதுவுமில்லாது மிகநெருக்கமான வரிசையில் காத்திருந்தனர். இந்த மக்கள் நெரிசலை கட்டுப்படுத்த முடியாத விநியோகஸ்தரும், அந்த பால்மா விநியோக ஊழியர்களும் வாயிற்கதவை அடைத்து பால்மா விநியோகத்தை நிறுத்தினர்.

சம்பவ இடத்திற்கு வந்த பாதுகாப்புப்படையினர் பொதுமக்களின் நிலைகளை விளக்கி பால்மா விநியோகம் தொடர்பில் ஒழுங்கான பொறிமுறையொன்றை அமைக்குமாறு விநியோகஸ்தரிடம் கோரினர். கட்டுக்கடங்காமல் ஊரடங்கு அமுலில் உள்ள இந்த சூழ்நிலையில் நிந்தவூரில் கொரோனா அலை அதிகமாக உள்ள விடயத்தை கவனத்தில் கொண்டு நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரோசா நக்பருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய ஊழியர்களினால் குறித்த விநியோகஸ்தரின் களஞ்சியசாலை வளாகத்தில் கொரோனா பரிசோதனை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த சம்மாந்துறை போக்குவரத்து பொலிஸாரும், சம்மாந்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களும் பாதுகாப்பு படையினருடன் இணைந்து நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

சம்பவ இடத்திற்க்கு வந்த நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரோசா நக்பர், பாதுகாப்பு படையினர், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொலிஸார், பால்மா விநியோகஸ்தர் என பலரும் கலந்துரையாடி பால்மா விற்பனையை நிறுத்தி வர்த்தக நிலையங்களூடாக பால்மா விநியோகிக்க நடவடிக்கை எடுத்தனர். கொரோனா சட்டதிட்டங்கள் எதையும் மதியாது இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மக்கள் தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர். மேலும், பால்மா தட்டுப்பாடு காரணமாக காரைதீவில் அதே வெளிநாட்டு தயாரிப்பு பால்மா விநியோக வாகனத்தை காரைதீவில் இடைமறித்து மக்கள் பால்மா கேட்டு நின்றதுடன் நீண்டநேர போராட்டத்தின் பின்னர் குறித்த நிறுவன ஊழியர்கள் மக்களிடமிருந்து சென்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.