அமெரிக்கா செல்லவிருக்கும் ஜனாதிபதி!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் நோக்கில் ஜனாதிபதி அமெரிக்காவிற்கு விஜயம் செய்யக்கூடிய சாத்தியம் உண்டு என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த மாதத்தின் மூன்றாம் வாரத்தில் அவர் அமெரிக்கா விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.

இறுதியாக கடந்த 2018ம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றியிருந்தார். எதிர்வரும் 21ம் திகதி முதல் 23ம் திகதி வரையில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டம் அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் ல்லித் வீரதுங்க மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனாத் கொலம்பகே ஆகியோர் மட்டும் இந்த விஜயத்தில் இணந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி தனது பேத்தியை முதல் தடவையாக பார்வையிட உள்ளதாக தெற்கு ஊடகத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.