அடையாளம் தெரியாத சடலங்களை அகற்றுமாறு சுகாதார அமைச்சர் உத்தரவு.

நாடளாவிய ரீதியில் அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ள அடையாளம் தெரியாத சடலங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார சேவைகள் பணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பல்வேறு வழக்குகளில், நீதிமன்ற முடிவுகளால் சில அடையாளம் தெரியாத உடல்களை மருத்துவமனைகளில் இருந்து அகற்ற முடியவில்லை என
சுகாதாரத்துறை சுட்டிக்காட்டியிருந்தந்தது.

இதையடுத்து அகற்ற முடியாத அடையாளம் தெரியாத சடலங்கள் தொடர்பில் காணப்படும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்து அவற்றை உடனடியாக அகற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

இவ்வாறு அடையாளம் தெரியாத உடல்களால் பல மருத்துவமனை பிரேத அறைகளில், அதிக சடலங்கள் இருப்பதாகவும் மருத்துவமனை தலைவர்கள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்