தொப்பிகலயில் அநுராதபுர யுகத்தை சேர்ந்த பௌத்த விகாரையின் இடிபாடுகள் கண்டுபிடிப்பு…

தொப்பிகல, நரகமுல்ல பகுதியில் முன்னெடுக்கப்படும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் அநுராதபுர யுகத்தை சேர்ந்த பௌத்த விகாரையொன்றின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம், இராணுவம் மற்றும் தொல்பொருள் முதுகலை பட்டப்படிப்பு நிறுவனத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ உள்ளிட்டோர் இந்த அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அகழ்வாராய்ச்சி முன்னெடுக்கப்படும் விகாரை தொகுதியில் இருந்து 16 கல்வெட்டுக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.

இதனிடையே, காவன்திஸ்ஸ மன்னனினால் வழங்கப்பட்ட நன்கொடை தொடர்பிலான கல்வெட்டும் இதில் அடங்குகின்றது.

இந்த விகாரை தொகுதியில், சிறிய தூபி, புராதன கட்டிடம், புராதன கற்கள் மற்றும் சேதமடைந்துள்ள சிலையும் இதன்போது மீட்கப்பட்டதாக பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்