இலங்கைக்கு மேலுமொரு தொகை தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.

கொரோனாவுக்கு எதிரான மேலும் ஒரு தொகை சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அதன்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட தடுப்பூசிகளே இவ்வாறு நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இதற்கமைய, இதுவரை 22 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்