நாட்டில் சர்வாதிகார இராணுவ ஆட்சி – மாவை சேனாதிராஜா குற்றச்சாட்டு…

நிர்வாகத்துறையின் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் இராணுவ அதிகாரிகளை நியமிப்பது சர்வாதிகார இராணுவ ஆட்சிக்கு வழி வகுக்குமென தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

அவருடைய இல்லத்தில் நடந்த நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே, அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜனாதிபதி பதவி சர்வாதிகார ஆட்சியை நோக்கி செல்லுமென்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸிற்கு இராணுவத்தை பயன்படுத்துவது நல்லதுதான். அதேவேளை எல்லாத்துறையிலும் குறிப்பாக நிர்வாகத்துறையில் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் இராணுவ அதிகாரிகளை நியமிப்பது சர்வாதிகார இராணுவ ஆட்சிக்கு வழி வகுக்கும்.

பாராளுமன்ற கட்சி தலைவர்களையும் மருத்துவ நிபுணர்களையும் சேர்ந்து ஒரு தேசிய அமைப்பை உருவாக்கி திட்டங்களை உருவாக்க அரசாங்கம் தவறிவிட்டது.

கொரோனா தொற்றின் திரிபுகள் தீவிரமடைந்து வருவதால் மக்கள் அவதானத்துடன் சுகாதார நடைமுறை பின்பற்றியும் செயற்பட வேண்டும். கொரோனா வைரஸ்போல விலைவாசியும் எகிறியுள்ளது.

உழைப்பின்மை, வறுமை பசி பட்டினி காரணமாக மக்களுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்கான திட்டங்களை அரசு உருவாக்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்ள நீண்டவரிசையில் நிற்பதுடன் அலைந்து திரிகின்ற நிலையும் ஏற்பட்டுள்ளது என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்