கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் பிரிவில் தொடரும் நடமாடும் தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கை !

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்  வைத்தியர் ஜீ. சுகுணனின் நெறிப்படுத்தலில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்ஸீமா வசீரின் தலைமையில் காரைதீவு பிரதேசத்திலும், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.அல் அமீன் றிசாட் தலைமையில் சாய்ந்தமருதிலும், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம். அஸ்மியின் தலைமையில் கல்முனை தெற்கு சுகாதார பிரிவிலும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் உத்தியோகத்தர்களினால் நடமாடும் கொரோனா தடுப்பூசி  செலுத்தும் நடவடிக்கைகள் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இரண்டாவது தடுப்பூசியினை நிலையங்கலுக்கு சென்று பெற முடியாதவர்கள் மற்றும் அங்கவீனர்களுக்கான நடமாடும் சேவை சுகாதார வைத்திய அதிகாரிகளினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.  இந்த நடமாடும் தடுப்பூசி வழங்கல் குழுவில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், கிராம நிலைதாரிகள், குடும்ப நல உத்தியோகத்தர்கள், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பணியாளர்கள், பல்நோக்கு செயலணி பயிற்சியாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் கடந்த நாட்களில் பொதுமக்கள் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள மிகவும் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தும் நிலையங்களுக்கு வருகை தந்து தமக்கான தடுப்பூசியைபெற்றுக் கொண்டதை அவதானிக்க முடிந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்