யாழ் கல்வியங்காடு பிரபல வர்த்தக நிலையத்தில் கொள்ளை !!!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு தற்போது அமுலில் உள்ள நேரத்தில் யாழ்ப்பாணம்  கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள   பிரபல வர்த்தகநிலையம் ஒன்றில் நேற்றிரவு  (04)  கொள்ளை  இடம்பெற்றுள்ளது.
கொள்ளை சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட  யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள மிகபழமை வாய்ந்த மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்ற பிரபல வர்த்தக நிலையமொன்றில் நேற்றிரவு (04) இனந்தெரியாத கொள்ளை கும்பல் கடை  முன் வாயில் வழியாக பூட்டை உடைத்து மர்மமான முறையில் கடைக்குள் புகுந்து பெறுமதியான பால்மா பெட்டி வகைகள்  பொருட்கள் மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையடித்ததோடு கடையில் பாதுகாப்புக்காக பொறுத்தப்பட்டிருந்த  சிசிடிவி காமரா (டிவி .ஆர்) யும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
மேலும் குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வர்த்தக  நிலைய உரிமையாளரால் கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதை அடுத்து  குறித்த சம்பவ இடத்திற்கு விரைந்த  கோப்பாய் பொலிஸார் கொள்ளை தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்