தட்டுப்பாடு நிலவும் பொருட்கள் வரிசையில் கோதுமை மாவும் இணைவு.

சந்தையில் கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளதென தெரிவிக்கப்படுகிறது.

ப்ரிமா நிறுவனம் சமீபத்தில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 12 ரூபாயால் உயர்த்திய பின்னர் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் அனுமதியின்றி ப்ரிமா நிறுவனம் கோதுமை மாவின் விலையை அதிகரித்துள்ள நிலையில் இது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்