அம்பாறையில் புலிகளின் பயிற்சி முகாமாக இருந்த பகுதியில் இருந்து துப்பாக்கிகள் மீட்பு.

அம்பாறை- கஞ்சிக்குடியாற்றில் விடுதலை புலிகளின் பயிற்சி முகாமாக இருந்த பகுதியில், எல்.எம்.ஜீ. துப்பாக்கி மற்றும் உள்ளூர் துப்பாக்கிகள் ஆகியவற்றை மீட்டதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக  கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு சென்ற  விசேட புலனாய்வு பிரிவினர், அங்கிருந்த மலசல கூடத்துக்கு அருகில், கைவிடப்பட்டு துருப்பிடித்த எல்.எம்.ஜீ ரக துப்பாக்கி ஒன்றை மீட்டனர்.

அதனைத் தொடர்ந்து புலனாய்வு பிரிவினர், அப்பகுதியினை சுற்றி முழுமையாக சோதனைக்கு உட்படுத்தியப்போது, அந்த பகுதியிலுள்ள மலைகுகையில் இருந்து உள்ளூர் துப்பாகி இரண்டை மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கிகள், பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்