புத்தளம் கற்பிட்டியில் 1,026 கிலோ உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டது! நால்வர் கைது…

கற்பிட்டி ஏத்தாளை பகுதியில் மிகவும் சூட்கமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1026 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

அத்துடன், இந்தந் சுற்றிவளைப்பின்போது நால்வர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

வடமேற்கு கடற்படை கட்டளையின் விஜய கடற்படையினர் கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏத்தாளை பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த உலர்ந்த மஞ்சள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியிலுள்ள கடற்பிரதேசத்தில் சந்தேகத்துக்கிடமான இரண்டு படகுகளை கடற்படையினர் சோதனை செய்தனர். இதன்போது, குறித்த இரண்டு படகுகளிலும் மிகவும் சூட்சகமான முறையில் 31 உர மூடைகளில் பொதி செய்யப்பட்ட மறைத்து வைக்கப்பட்டிருந்த 1026 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளை கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது குறித்த இரு படகுகளில் இருந்தும் நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதுன், இரண்டு டிங்கி படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 29 – 41 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் இவர்கள் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட உலர்ந்த மஞ்சள் மற்றும் டிங்கி படகுகள் என்பனவும் மேலதிக விசாரணைகளுக்காக சின்னப்பாடு சுங்க அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, கற்பிட்டி பிரதேசத்தில் கடந்த ஐந்து நட்களில் மட்டும் 3004 கிலா கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், எட்டு பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 17 ஆம் திகதி கற்பிட்டி கிளித்தீவு பகுதியில் 370 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 19 ஆம் திகதி இப்பந்தீவு பகுதியில் 650 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் மூவரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், கடந்த 22ஆம் திகதி இப்பந்தீவு பகுதியில் 500 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளும் வெள்ளிக்கிழமை (27) அதே பகுதியில் 458 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இன்று ஞாயிற்றுக்கிழமை (05) ஏத்தாளை பகுதியில் 1,026 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்