நிந்தவூரில் உதயமானது நிகழ்நிலை இலவச கல்வி செயற்திட்டம் !

நிந்தவூர் பல்கலைக்கழக மாணவர்கள் சமூக சேவைகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டினால் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குரிய முக்கிய பாடங்கள் மற்றும் பரீட்சையை மையமாகக் கொண்டு இலவசமாக கற்பிக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை தொகுதி முக்கியஸ்தரும் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபை பணிப்பாளர் சபை உறுப்பினருமான றிஸ்லி முஸ்தபா இவ் வேலைத்திட்டத்திற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்கியதுடன் அதற்கான பல உதவிகளையும் வழங்க முன்வந்துள்ளார்.

“றிஸ்லி முஸ்தபா கல்வி நிதியம்” திட்டம் மூலமாக இப் பங்களிப்பு நடைபெற்றது. இதன் போது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு டெப் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிராந்திய முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்