நாட்டிற்கு தற்போது எது அவசியம்? சஜித் பிரேமதாச விசேட அறிவிப்பு!

தற்போது நாட்டுக்குத் தேவையானது அவசர கால நிலை அல்ல என்றும், உயிர்களைக் காப்பாற்ற வேண்டிய அவசியமும் அவசரமும் தான் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

பொருட்களின் விலையை கட்டுப்படுத்த அவசரகால நிலை தேவையில்லை என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர்,அதற்கு பகரமாக 2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார ஆணைக்குழுச்சட்டமும் அந்த அதிகார சபையும் அந்த நோக்கத்திற்காக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

இருப்பினும், அரசாங்கம் அவற்றை அமுல்படுத்தாது உற்ற நண்பர்களுக்கு நிவாரணம் அளித்தவன்னமுள்ளதாகவும் மக்கள் அத்தகைய ஒரு ஆட்சியை விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(06) ஊடகங்களுக்கு விஷேட அறிக்கையை வெளியிடும் வன்னமே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார்.

கொவிட் தொற்றுநோய் ஒரு தேசிய அனர்த்தம் என்பதோடு இவ்வாறான அனர்த்தங்களின் போது, 2005 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் செயல்பட அதிகாரம் உள்ளது எனவும் அதன் மூலம் அனர்த்த

முகாமைத்துவ தேசிய சபையை என்ற ஒன்றை ஸ்தாபிப்பதற்கும் ஜனாதிபதி இன்னும் செயற்ப்படவில்லை என்றும் எதிர்க் கட்சித் தலைவர் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியானது அவசரகால விதிமுறைகளை கடுமையாக எதிர்க்கிறது என்றும், மக்களின் ஜனநாயகத்தின் மீது இத்தகைய தாக்குதலை மேற்கொள்ள அரசாங்கம் எடுத்துள்ள அனைத்து நடவடிக்கைகளையும் தோற்கடிப்பதாகவும் அவர் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்