நாவிதன்வெளியில் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தும் பணி…

நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால்  30வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சைனோபாம் கொவிட்-19 தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தும் வேலைத்திட்டம் இன்று  இடம்பெற்றது.
வீரத்திடல் அல்-ஹிதாயா மகா வித்தியாலயம், சொறிக்கல்முனை ஹொலிக்குரோஸ் மகா வித்தியாலயம் ஆகிய இரண்டு பாடசாலைகளிலும் தடுப்பூசி ஏற்றும் பணிகள் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ரீ.வினோதினி தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது இதுவரைக்கும் தடுப்பூசியை பெறாத 30வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சைனோபாம் கொவிட் -19 தடுப்பூசியின் முதலாவது டோஸ் வழங்கப்பட்டது.
தடுப்பூசி ஏற்றும் நிலையங்களுக்கு மக்கள் ஆர்வத்துடன் வருகை தந்து தடுப்பூசியை பெற்றுக் கொள்வதைக் காணமுடிந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்