கொரோனா காலப்பகுதியில் களப்பணியாற்றிவரும் ஊடகவியலாளர்களுக்கு அன்பளிப்பு வழங்கி வைப்பு !

நாட்டில் உக்கிரதாண்டவமாடி வரும் கொரோனா அலையை கட்டுப்படுத்த பல்வேறு வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. அதனை மக்கள் மயப்படுத்தும் நோக்கில் கொரோனா காலப்பகுதியில் பாரிய அர்ப்பணிப்புடன் களப்பணியாற்றிவரும் ஊடகவியலாளர்களுக்கு கொரோனா பாதுகாப்பு கவசம் உள்ளடங்கிய உணவுப்பொதிகளை வைத்தியர் எஸ்.எம்.தௌதரினால் இன்று (07) வழங்கி வைக்கப்பட்டது.
கொரோனா காலங்களில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகச்
சிறப்பாக செயற்பட்டு அவ்வப்போது உண்மைத்தன்மையான செய்திகளை உடனுக்குடன் வழங்கி வந்த ஊடகவியலாளர்களுக்கு இந்தப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வு சிலோன் மீடியா போரத்தின் சாய்ந்தமருது தலைமைக் காரியாலயத்தில் அதன் தலைவர் கலாநிதி றியாத் ஏ மஜீத் தலமையில் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்