இரு தடுப்பூசிகளையும் பெற்ற உதவி பொலிஸ் பரிசோதகர் கொவிட் நிமோனியாவால் பலி…

காலி கராப்பிட்டி போதனா மருத்துவமனையில் பொலிஸ் தலைமையகத்தில் பணியாற்றிய உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கொவிட் நிமோனியாவால் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் பிரேதப் பரிசோதனையில் இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றிருந்தமை உறுதியானது.

குறித்த நபர் 57 வயதான வாத்துவ பொதுபிட்டியவைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

உயிரிழந்த உதவி பொலிஸ் பரிசோதகருக்கு இரு குழந்தைகள் உள்ளதுடன் நீரிழிவு மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

ஓகஸ்ட் 19 மேற்கொண்ட அண்டிஜென் பரிசோதனையில் குறித்த நபருக்கு கொவிட் பாதிக்கப்பட் டமை உறுதியானதையடுத்து பொலிஸ் கொவிட் சிகிச்சை நிலையத்துக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். அங்கிருந்து கராப்பிட்டிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்று உயிரிழந்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்