4200 கறவைப் பசுக்களை இறக்குமதி செய்யத் தீர்மானம் ; 8275 மில்லியன் ரூபா முதலீட்டில் பால் பண்ணைகள்…

நாட்டின் பால் உற்பத்தியை அதிகரிக்க 4200 கறவை பசு மாடுகளை இறக்குமதி செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐந்து தனியார் நிறுவனங்களுக்கு இதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
இந்நிறுவனங்கள் பால் பண்ணைகளை நடத்துவதற்காக 2771 ஏக்கர் தரிசு நிலத்தை ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

தரிசு நிலங்களை ஜனதா தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் கால்நடை அபிவிருத்தி சபை ஆகியவற்றுக்கு வழங்கும் நம்பிக்கையுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் 8275 மில்லியன் ரூபாவை முதலீடு செய்யவுள்ளன.

இதற்காக அரசாங்கம் எந்தப் பணத்தையும் முதலீடு செய்யாது என்றும் அவர் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்