மஹிந்த குழுவினர் வத்திக்கான் சென்று பொய் சொல்ல போகிறார்கள் .

இத்தாலிக்கான விஜயத்தின் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்து சர்வதேச சமூகத்திற்கும் பரிசுத்த பாப்பரசரிற்கும் பிரதமரும் வெளிவிவகார அமைச்சரும் உண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்கவுள்ளனர் என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

உயிர்த்தஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்து பரிசுத்த பாப்பரசரிற்கு தெளிவுபடுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை தான் கடுமையாக எதிர்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கத்தோலிக்க திருச்சபை இந்த விசாரணைகள் குறித்து ஏற்கனவே பரிசுத்த பாப்பரசரிற்கு தெளிவுபடுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகள் குறித்துவத்திக்கான் ஜெனீவாவிற்கு தனது கருத்தை முன்வைக்கவுள்ளது என மல்கம் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு விசாரணைகள் குறித்து பிரதமரும் வெளிவிவகார அமைச்சரும் பரிசுத்த பாப்பரசரிற்கு தெளிவுபடுத்த உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

2019 ஏப்பிரல் 21 ம் திகதி கத்தோலிக்க தேவாலயங்கள் ஹோட்டல்களில் இடம்பெற் குண்டு தாக்குதல்கள் குறித்து அரசாங்க தரப்பினர் பரிசுத்த பாப்பரசரிற்கு எடுத்துரைப்பார்கள் என பாதிக்கப்பட்டவர்களின் துயரங்களிற்கு தீர்வு காண்பதற்கான
மற்றும் நீதி நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிப்பார்கள் எனவும் அமைச்சரவை பேச்சாளர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.

எனினும் இது உண்மைகளை மறைக்கும் பரிசுத்த பாப்பரசரையும் சர்வதேச சமூத்தினையும் தவறாக வழிநடத்தும் நடவடிக்கை என கர்தினால் தெரிவித்துள்ளார்.

அரசாங்கமும் சர்வதேச சமூகத்திடம் சென்றால் வேறு மார்க்கம் இல்லை என்பதால் நாங்களும் சர்வதேச சமூகத்திடம் செல்வோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்களை காப்பாற்றுவதற்காக மிகவும் தந்திரோபாயமாக சதித்திட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது,அரசாங்கத்திற்கு சாதகமான விதத்தில் சித்தரிப்புகளை மேற்கொண்டு உண்மையை மறைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.