Exclusive: SLTDA: கீமாலியால் விரைவில் இலங்கையில் ரஷ்ய ’கொரோனா கொத்தணி’

இலங்கை சுற்றுலா துறைக்கு பொறுப்பாக இருக்கின்ற பிரதான நிறுவனங்களில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை முக்கிய பங்கு வகிக்கிறது.

அதன் தலைவரான கீமாலி தற்போது ரஷ்யாவிடம்  ஏமாற்றமடைந்து இலங்கையில் ரஷ்ய கொரோனா  கொத்தணியை  ஏற்படுத்த முயற்சிக்கிறார்.

உக்ரைனில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து வந்து உதயங்க வீரதுங்க அரங்கேற்றிய நாடகத்தை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் நாடகமாக இது அமையும்.

செப்டம்பர் 7ஆம் திகதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதமொன்றை அனுப்பி இலங்கையில் சுற்றுலா அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு பின்வரும் பரிந்துரைகளை செயல்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

1. பூரண கொரோனா தடுப்பூசி ஏற்றுக்கொண்ட விமான சேவை ஊழியர்களின் கொரோனா பாதுகாப்பு ஆடையை அகற்றுதல்.

2. விமானத்தில் செல்ல உள்ள பயணிகளுக்கு எழுபத்தி இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னர் பிசிஆர் செய்ய வேண்டியதன் அவசியத்தை இல்லாது செய்தல்.

3. ஐரோப்பிய சங்கத்தின் நடைமுறைகளுக்கு அமைய 12 வயதிற்கு கீழ்ப்பட்ட நபர்களுக்கு பிசிஆர் செய்வதை தடை செய்தல்.

4. தடுப்பூசி செலுத்திக்கொட சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையத்திலும் சுற்றுலா செல்லும் தளங்களிலும் ரபிட்  பரிசோதனை செய்வதை உறுதிப்படுத்துதல்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.