கல்முனை பிராந்தியத்திற்கு வேர்ல்ட் விசன் நிறுவனத்தினால் 80 நோயாளர் கட்டில்கள் வழங்கிவைப்பு !

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணனின் வேண்டுகோளுக்கு இணங்க வேர்ல்ட் விசன்  நிறுவனத்தினால் கல்முனை பிராந்தியதிற்கு உட்பட்ட வைத்தியசாலைகளுக்கு 80 நோயாளர் கட்டில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கொவிட் 19 தொற்று பரவல் நிலைமையை அடுத்து கல்முனைப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள நோயாளர்களுக்கான கட்டில்கள் தட்டுப்பாடு  குறித்து பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் எடுத்துக்கொண்ட முயற்சியின் பலனாக இந்த கட்டில்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன் படி சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான கட்டில்கள் கல்முனை பிராந்திய திற்கு உட்பட்ட அக்கரைப்பற்று திருக்கோவில் பாலமுனை சாய்ந்தமருது மருதமுனை அண்ணமலை ஆகிய 5 வைத்தியசாலைகளுக்கு வழங்கிவைக்கப்பட்டன.

இது தொடர்பான நிகழ்வு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி சுகுணன் தலைமையில் அட்டாளைச்சேனை அல் ஷகீ பெங்குட் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கல்முனை பிராந்திய திட்டமிடல் வைத்திய அதிகாரி டாக்டர் எம் சி மாஹிர், பாலமுனை பிரதேச வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் ஏ எம் நௌபல், சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம் எச் கே சனூஸ் காரியப்பர் உட்பட  வைத்திய அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.