241 வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி, அரசாங்க ஆயுள்வேத ஆராய்ச்சி தொற்றா நோய் வைத்தியசாலைக்கு விஜயம் !

கொரோணா தொற்று பரவல் நிலைமை தற்போது தீவிரமடைந்து வருவதால் இது குறித்து மக்களுக்கு விழிப்பூட்டும் செயல்பாடுகளை நிந்தவூர் அரசாங்க ஆயுள்வேத ஆராய்ச்சி தொற்றா நோய் வைத்தியசாலை தொடர்ந்தும் மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு அங்கமாக நிந்தவூர் அரசாங்க ஆயுள்வேத ஆராய்ச்சி தொற்றா நோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கே எல் நக்பரின் அழைப்பின் பேரில் அம்பாறை மாவட்ட 241 வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி கேணல் ஏ.எம்.சி. அபயகோன் நிந்தவூர் அரசாங்க ஆயுள்வேத ஆராய்ச்சி தொற்றா நோய் வைத்தியசாலைக்கு விஜயமொன்றை மேற்கொண்டு வைத்தியசாலை நடவடிக்கைகளை பார்வையிட்டார்.

இதன்போது அம்பாறை மாவட்டம் முழுவதிலும் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன விழிப்பூட்டும் செயற்பாடுகள் தொடர்பிலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் “சுவதரணி” மருத்துவ பானங்களும் வழங்கி வைக்கப்பட்டு வருவது தொடர்பிலும் கேட்டறிந்து கொண்ட  241 வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி கேணல் ஏ.எம்.சி. அபயகோன் நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கே எல் நக்பர் தலைமையிலான வைத்தியசாலை ஊழியர்களை பாராட்டியதுடன் மேலும் இந்த பணியை தொடர்ந்து செய்து மக்களை விழிப்பூட்டும் வழிவகைகள் தொடர்பிலும் ஆராய்ந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.