மின்தகன மயானம் அமைப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் பிரதேச சபையில் இன்று நடைபெற்றது.

நாளுக்கு நாள் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் கிளிநொச்சியில் மின்தகன மயானம் அமைப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல் இன்று பிற்பகல் வேளையில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர்                             அ .வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றது

குறித்த மயானத்தை அமைக்க 25 மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது. அந்தத் தொகையில் ஒரு கோடி ரூபாவை கிளிநொச்சியில் உள்ள வர்த்தகர் ஒருவர் வழங்க முன்வந்துள்ளார்.  புலம்பெயர் அமைப்பு ஒன்றும் உதவ முன்வந்துள்ளது
குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வைத்தியகலாநிதி மு. சிறீதர், அதிபர்கள் ஆசிரியர்கள் கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர் .
மின்மையானம் அமைப்பதற்கான ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.
தலைவராக கிளிநொச்சி மாவட்ட முன்னாள் வர்த்தக சங்கத்தின் தலைவர் நவரட்ணராஜா செயலாளராக ஆசிரியரும் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினருமான சத்தியானந்தன் பொருளாளராக அதிபர் விக்கினராஜா உபதலைவராக வர்த்தக சங்கத்தின் பொருளாளர் ஆனந்த வடிவேல் உபசெயலாளராக ரவி அவர்களும் உறுப்பினர்களாக வைத்தியகலாநிதி மு. சிறீதர் கிளிநொச்சி சேவைச் சந்தையின் தலைவர் இரத்தினமணி மற்றும் ரவீந்திரன் ஆகியோரும் அக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்