கல்முனை பஸ்தரிப்பு நிலையம் 18.7மில்லியன் செலவில் நவீனமயமாக்கல்!

(வி.ரி.சகாதேவராஜா)
கல்முனை பிரதான பஸ் தரிப்பு நிலையம் செழிமைமிக்க 100நகரங்கள் – நகரஅழகுபடுத்தும் திட்டத்தின்கீழ் முதல் தடவையாக 18.7 மில்லியன் ருபா செலவில் கல்முனை மாநகரசபையால் நகரஅபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து நவீனமயமாக்கப்படவுள்ளது.
அதற்கான ஆரம்ப பெயர்ப்பலகை திரைநீக்கும் நிகழ்வு  இன்று (10) வெள்ளி மாலை கல்முனை மாநகர மேயர் சட்டத்தரணி எம்.எ.றக்கீப் தலைமையில் நடைபெற்றது.
நகரஅபிவிருத்தி அதிகாரசபை பிரதிநிதி மாநகரசபை உறுப்பினர்கள் கலந்துகொண்ட இத்திட்ட ஆரம்பநிகழ்வில் மேயர் றக்கீப் நகரஅபிவிருத்தி அதிகாரசபை பிரதிநிதி எஸ்.ஜெயதிஸ்ஸ  கல்முனை மாநகரத்திற்கான  த.தே.கூ. மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் திரைநீக்கம் செய்துவைத்தனர்.
பஸ்தரிப்பு நிலையம் கார்பட் இடப்பட்டு நவீனமயப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்