நுவரெலியா மாவட்டத்தில் மிக வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள்.

(க.கிஷாந்தன்)

 நுவரெலியா மாவட்டத்தில் மிக வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் ஒரு சில பொது சுகாதார வைத்திய அதிகார பிரிவுகளில் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நுவரெலியா மாவட்டத்திலுள்ள 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் – 19 தடுப்புக்கான தடுப்பூசி ஏற்றும் பணி இன்று (11.09.2021) ஆரம்பமானது.

சீன தயாரிப்பான சினோ பாம் தடுப்பூசியின் முதலாவது டோஸே இன்று முதல் இவர்களுக்கு ஏற்றப்படுகின்றது.

பாடசாலைகளிலும், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களிலும் ஏனைய சில நிலையங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அந்தவகையில், 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சைனோபாம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தும் பணிகள் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

இதனை பெற்றுக்கொள்வதற்காக அதிகளவிலான இளைஞர்களும், யுவதிகளும் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசியை பெற்றுக் கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.