செங்கல் லொறி விபத்து: மதிலில் மோதி தடம்புரண்டது!

(வி.ரி.சகாதேவராஜா)

நயினாகாட்டிலிருந்து செங்கல் ஏற்றிவந்த ரிப்பர் லொறியொன்று விபத்துக்குள்ளானதில் பாரியசேதம் ஏற்பட்டது.
இச்சம்பவம் காரைதீவு பிரதானவீதியில் நேற்று(11)சனிக்கிழமை பிற்பகல் 3மணியளவில் இடம்பெற்றது.

நயினாகாட்டிலிருந்து கல்முனை நோக்கி செங்கல் ஏற்றிக்கொண்டு வந்தகொண்டிருக்கையில் காரைதீவு கந்தசுவாமி ஆலயமுன்ளாலுள்ள பிரதானவீதியில்வைத்து திடிரென டயர் வெடித்து இவ்விபத்து சம்பவித்துள்ளது.


திடிரென டயர்வெடித்தகாரணத்தினால் வேகமாகவந்த லாறி ஆலயத்திற்கு முன்னாலுள்ள வீட்டு மதிலில் மோதி தடம்புரண்டது.. மதில் சுக்குநூறாக உடைந்தது. ஏற்pவந்த செங்கல் அனைத்தும் வீதியில் சிதறியது.


எனினும் யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை. காரைதீவுப்பொலிசார் ஸ்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்