DP Education இலங்கையில் உள்ள 4.2 மில்லியன் மாணவர்களில் 650,000 மாணவர்களை சென்றடைந்துள்ளது.

கொவிட் தொற்று நோயானது முழு உலகத்தின் கல்வி செயன்முறைகளை மாற்றிமைத்துள்ளது. இதன் விளைவாக  பாடசாலைக்கல்வி முறையானது வியத்தகு முறையில் மாற்றமடைந்துள்ளது. ஓர் தனித்துவமான இலத்திரனியல் எனும்   டிஜிட்டல்  தளத்தில் கற்பித்தலை தொலை இயக்கியாக கொண்டு (remote)  இது கால் பதித்துள்ளது.

இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கையின் முன்னணி வர்த்தகர், தொழிலதிபர் திரு தம்மிக்க பெரேரா என்று அழைக்கப்படும் திரு குலப்பு ஆராச்சிகே டொன் தம்மிக்க பெரேரா அவர்கள் ஓர் நவீன யுகத்திற்குள் கால் பதித்துள்ளார். DP எடியுகேஷன் எனும் புதிய கல்விசார் நடைமேடை ஒன்றை இவர் அறிமுகம் செய்துள்ளார். இதுவே இலங்கையில் உள்ள மிகப்பெரிய நிகழ்நிலை  (online)   கற்றல் கூடமாகும். பாடசாலை பாடத்திட்டங்களுடன் கூடிய  கணிதம், விஞ்ஞானம், மற்றும் ஆங்கிலம் போன்ற முக்கிய பாடங்களை  உள்ளடக்கிய கற்பித்தல் காணொலிகள் அனுபவம் நிறைந்த ஆசிரியர்களாலும், கல்வியாளர்களாலும் மாணவரின் அறிவை மேம்படுத்துமுகமாக கற்பிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.