மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் மரணம்…

உரும்பிராய் பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் அகப்பட்ட 67 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த விபத்தின்போது
கெதர குணரத்ன என்னும் மனியந்தோட்டத்தையை சேர்ந்த 67 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

ஊரெழு பகுதிக்கு மோட்டார் சைக்கிளில்  தொழில் நிமித்தம் சென்று வீடு திரும்பிய சமயம் உரும்பிராயில் எதிரே வந்த மற்றுமோர்  மோட்டார் சைக்கிள் மோதியதில் மூவரும் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவ்வாறு உயிரிழந்தவரின் மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டு உடலை பி.சி.ஆர் பரிசோதனைக்கு ஒப்படைத்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்