கொரோனாவினால் பாதிக்கப்பட்ட யாசகர்களுக்கு நள்ளிரவு கம்பளி போர்வை விநியோகம்.

கொரோனா அனர்த்தத்தினால்  பாதிக்கப்பட்டுள்ள  யாசகர்களுக்கு இரவு வேளை உணவு பொதிகள், கம்பளி போர்வைகள்,   விநியோகிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம்  கல்முனைப் பிராந்தியத்தில் பொது இடங்களில் தற்போது கொரோனா தொற்றுக் காரணமாக பொதுமுடக்கம் அரசினால்  விதிக்கப்பட்டுள்ள நிலையில் இங்குள்ள யாசகர்கள் பலர் உணவு இன்றியும் உறக்கமின்றியும்  பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனைக் கருத்தில் கொண்டு அப்பகுதியில் உள்ள ஊடகவியலாளர் குழு மேற்கொண்ட  வழிகாட்டலில் சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தக சங்கத் தலைவரும்  சாய்ந்தமருது முபாரக் டெக்ஸ் குழுமத்தின் நிறைவேற்று பணிப்பாளருமான  எம்.எஸ்.எம். முபாரக் தலைமையில் நள்ளிரவு(15)   இப்பகுதியிலுள்ள யாசகர்களுக்கு  உணவு உட்பட கம்பளி போர்வைகள்   வழங்கி வைக்கப்பட்டன.

இதன் போது கடும் பனி நுளம்பினால் உறக்கமின்றி காணப்பட்ட ஒவ்வொரு யாசகர்களதும் நிலைமையை கேட்டறிந்து தனது கையினால் குறித்த கம்பளி போர்வைகளை கொண்டு மூடியதை காண முடிந்தது.

இந்த மனிதாபிமானப் பணியினை ஊடகவியலாளர்களுடன் இணைந்து அவர் அப்பகுதி யாசகர்களுக்கு உணவுகளை வழங்கி வருகின்றமை    குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்