அனுராதபுர மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட அனைத்து வீதி அபிவிருத்தி திட்டங்களையும் விரைவாக நிறைவு செய்ய வேண்டும்.

அனுராதபுர  மாவட்டத்தில்  ஆரம்பிக்கப்பட்ட அனைத்து வீதி அபிவிருத்தி திட்டங்களையும் விரைவாக  நிறைவு செய்ய வேண்டும் – நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ
வட மத்திய மாகாண ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு திட்டத்தின் கீழ் அனுராதபுர  மாவட்டத்தில்  ஆரம்பிக்கப்பட்ட அனைத்து வீதி அபிவிருத்தி திட்டங்களையும் விரைவாக  நிறைவு செய்ய வேண்டும். இந்த  வீதிகள் எதுவும்  கடந்த நல்லாட்சியில் நிர்மாணிக்கப்படவில்லை.
–  ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ
வட மத்திய மாகாண ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு திட்டத்தின்   கீழ் அனுராதபுர  மாவட்டத்தில்  ஆரம்பிக்கப்பட்ட அனைத்து வீதி அபிவிருத்தித்  திட்டங்களும் விரைவில்  நிறைவு செய்யப்பட   வேண்டும் என்று நெடுஞ்சாலை  அமைச்சரும்  ஆளும் தரப்பு பிரதம கொறடாவுமான   ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கடந்த  நல்லாட்சி அரசாங்கம் இந்த வீதிகளின் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பிப்பது ஒருபுறமிருக்க எந்த வேலையும் செய்யாமல் மக்களை  அப்பட்டமாக ஏமாற்றியதாகத் தெரிவித்த  அமைச்சர்  அமைச்சரவை அங்கீகாரத்துடன் தான் இந்த  வீதி அபிவிருத்தித்  திட்டங்களை  ஆரம்பித்ததாகவும்   கூறினார்.
வட மத்திய மாகாண ஒருங்கிணைந்த  வீதி அபிவிருத்தித்  திட்டத்தின் கீழ் அனுராதபுர  மாவட்டத்தில் 27 கிலோ மீட்டர் நீளமான  தலாவ -கெக்கிராவ
வீதி  (B 213), 7 கிலோ மீட்டர் நீள  கெக்கிராவ- கணேவல்பொல வீதி  (B212)  மற்றும் 45 கிலோ மீட்டர் நீள கணேவல்பொல – தச்சிஹல்மில்லேவ வீதி  (B133)  என்பன அபிவிருத்தி செய்யப்படுகிறது.
6745 மில்லியன்  ரூபா  செலவில் 82 கிலோ மீட்டர் நீளமான வீதி  நிர்மாணப் பணிகள்
முன்னெடுக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.