முஸ்லிம்களுக்கும் நீதியை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும். நகரசபை உறுப்பினர் எம்.எம். மஹ்தி.

கடந்த முப்பது வருட கால யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் எந்த வித  யுத்தக் குற்றங்களிலும் ஈடுபட வில்லை என ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் தலைமைத்துவம் இன்றி தடுமாறும் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்காகவும் இழப்புகளுக்காகவும் குரலெழுப்ப வேண்டுமென கிண்ணியா நகர சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளருமான எம்.எம்.மஹ்தி கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று (17)வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது
அதே யுத்தக் காலங்களில் வடக்கு ,கிழக்கு வாழ் முஸ்லிம்களும் பல்வேறு இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் முகம் கொடுத்து வந்தார்கள்.
1) வடக்கு வாழ் முஸ்லீம்கள் அனைவரும் உடமைகள், சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு வலு கட்டாயமாக ஆயுததாரிகளால் வெளியேற்றப்பட்டனர்.
2. காத்தான்குடி பள்ளிவாயலில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது முஸ்லிம்கள் அனைவரும் ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
3.மக்கா சென்று புனித ஹஜ் கடமையை நிறைவேற்றி வீடு திரும்பிய ஹஜ்ஜாஜிகள் வழி மறிக்கப்பட்டு ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
4. பொலன்நறுவையை அண்டிய முஸ்லிம் குடியேற்றங்களுக்குள் புகுந்த ஆயுததாரிகளால் பொதுமக்களும் கர்ப்பிணிகளும் கொல்லப்பட்டதோடு வயிற்றில் இருந்த குழந்தைகளும் வெளியே எடுக்கப்பட்டு வெட்டிக் கொல்லப்பட்டார்கள்.
5. மூதூரில் இருந்து முஸ்லிம்கள் கட்டாயத்தின் அடிப்படையில் ஆயுததாரிகளால் வெளியேற்றப்பட்டனர்.
6. ஆயுததாரிகளால் முஸ்லிம்கள் கடத்தப்பட்டு கப்பங்கள் பெறப்பட்டதோடு சுட்டுக் கொல்லவும் பட்டார்கள். 7.முஸ்லீம்களின் பொருளாதாரம், வியாபார நிலையங்கள்,சொத்துக்கள் என்பன பாரியளவில் ஆயுததாரிகளால் கொள்ளையிடப்பட்ட தோடு தீக்கிரையாக்கவும் பட்டன.
இவ்வாறு பல்வேறு அநியாயங்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் உட்பட்ட முஸ்லிம் சமூகமானது தலைமைத்துவம் இன்றி தள்ளாடிக் கொண்டிருக்கின்ற இவ்வாறான நேரத்தில் முஸ்லிம்களுக்காகவும் கௌரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற தலைவர்கள்  அவர்களின் உரிமைகளையும் பெற்றுக்கொடுக்க குரலெழுப்ப வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.