மஞ்சளுடன் ஊடுருவிய இந்திய நாட்டுப் படகு ஒன்று நேற்று இரவு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

புத்தளம் கற்பிட்டி கடற்பரப்பிற்குள் பெருமளவு மஞ்சளுடன் ஊடுருவிய இந்திய நாட்டுப் படகு ஒன்று நேற்று இரவு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்திய மீனவர்களின் நாட்டுப் படகில் 62 மூடைகளில் சுமார் இரண்டு  ஆயிரம் கிலோ மஞ்சளை கடத்தி வந்த படகினை கைப்பற்றிய கடற்படையினர் அதில் இருந்த ஆறு இந்தியர்களையும் கற்பிட்டி இறங்கு துறைக்கு கொண்டு வந்து மஞ்சளை இறக்குகின்றனர். இவ்வாறு இந்தியப் படகில் இருக்கும் மஞ்சள் இறக்கப்படுகின்றபோதும் இந்தியர்கள் திருப்பி அனுப்பப்படுவார்களா அல்லது கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்களா என்பது தொடர்பில் இதுவரை கடற்படையினரால் உறுதி செய்யவில்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்