சம்மாந்துறை பிரதேச இளைஞர் கழகத்தினர் இணைப்பாளர் ஜெசீலுடன் சந்திப்பு..!

சம்மாந்துறை பிரதேச இளைஞர் கழக  சம்மேளனத்தின் அழைப்பின் பேரில் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவர் டப்ளியு . டீ .வீரசிங்கவின் அட்டாளைச்சேனை பிரதேச இணைப்பாளர்  எஸ் .எம் .ஜெசீல் அவர்களுடனான சந்திப்பு இளைஞர்கழக சம்மேளனத்தின் தலைவர்
அஸ்வத் தலைமையில் சம்மாந்துறையில்
இடம்பெற்றது.
இச் சந்திப்பின் போது இணைப்பாளர் ஜெசீல் அவர்கள் இளைஞர்களிடம்  சினேக பூர்வமான முறையில் கலந்துரையாடியதுடன் மேலும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்  மற்றும் தேவைப்பாடுகளை கேட்டறிந்து கொண்டதுடன்  பிரதேசத்தில் உள்ள இளைஞர்களின் நலன் விடயங்கள் மற்றும் விளையாட்டு திறனை இனம் கண்டு
மேம்படுத்தல் பற்றி கலந்துரையாடினார் .
மேலும்  கொரோனா இடர் நிலையிலும் அம்பாரை மாவட்டத்தில் மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவர்  டப்ளியு . டீ .வீரசிங்கவின் வழிகாட்டலில் பிரதேச இளைஞர்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக  மேலும் இதன் போது தெரிவித்தார்.
அத்துடன் சம்மாந்துறை பிரதேச இளைஞர்களின்
தேவைகளை பூர்த்தி செய்ய  எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாகவும் ஜெசீல் உறுதியளித்தார்.
இதன் போது இளைஞர்சேவை
உத்தியோகத்தர் அமீரலி  , ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அம்பாறை மாவட்ட
முக்கியஸ்தகர்களான  சப்ரி  ,றிஸ்வின் மற்றும்
பிரதேச இளைஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்