கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ள முக்கிய தீர்மானம்…

இலங்கை பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் பதவிக்கு விண்ணப்பங்களின் ஊடாக பொருத்தமான நபரை தெரிவு செய்யப்படவுள்ளார்.

இலங்கை கல்வி அமைச்சு இது தொடர்பான தீர்மானத்தை எடுத்துள்ளது.

இதுவரை காலமும் குறித்த பதவிக்கு நீண்ட கால சேவை அனுபவத்தின் கீழ் கல்வி நிர்வாக சேவையின் முதல்தர அதிகாரிகள் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்துள்ளனர்.

எவ்வாறாயினும், தற்போது பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் பதவிக்காக பொருத்தமான தேர்ச்சி மட்டத்தை கொண்டிருப்பவர்கள் கல்வி அமைச்சரின் நிர்வாக சேவையில் இல்லையென்பதால் இவ்வாறு விண்ணப்பங்களின் ஊடாக பொருத்தமான நபரை தேர்ந்தெடுப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும், இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக இவ்வாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விண்ணப்பங்களின் ஊடாக தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்