மறைந்த உறுப்பினரின் பெயரில் வீதி…

திருகோணமலை நகராட்சி மன்றத்தின் உறுப்பினராக இருந்து மறைந்த  அமரர் ச.சனூன் அவர்களின் பெயரில் சோனகவாடி வட்டாரத்தில் உள்ள வீதிக்கு பெயர் சூட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருகோணமலை நகராட்சி மன்றத்தின் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினராக சோனகவாடி வட்டாரத்திற்கு தெரிவாகி செயற்பட்டு வந்த ஜனாப் சனூன் அவர்கள் கொவிட் தொற்று காரணமாக மரணமடைந்தார்.
அதன் பொருட்டு நேற்று 28ம் திகதி இடம் பெற்ற திருகோணமலை நகராட்சி மன்றத்தின் 42 வது சபைக் கூட்டம் தலைவர் நா.இராஜநாயகம் தலைமையில் இடம்பெற்ற போது அன்னாருக்காக அஞ்சலி செலுத்தியதுடன் அவருக்கான இரங்கல் உரைகளும் உறுப்பினர்களால் நிகழ்த்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற தலைவர் நா. இராஜநாயகம் அவர்களின் தலைமை உரையின் போது தலைவரின் பிரேரனையாக அவருடைய வட்டாரத்தில் உள்ள வீதி ஒன்றுக்கு பதவியில் இருக்கும் போது உயிரிழந்த அமரர். ச. சனூன் அவர்களின் பெயரை சூட்டுவது என சபையால் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்