ஆலையடிவேம்பு பிரதேச பொலிஸ் நிலையத்திற்கான நாவற்காடு பிரதேச பல்தேவைக்கட்டிடம் தெரிவு….

-கிரிசாந் மகாதேவன்-

நாடுபூராகவும் சௌபாக்கியத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் பிரதேசங்கள் தோறும் பிரதேச மக்களின் நன்மை கருதி பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றது.

அக்கரைப்பற்று தமிழ் பிரிவு ஆலையடிவேம்பு பிரதேச செயலாக பிரிவில் பொலிஸ் நிலையம் ஒன்று அமைப்பதற்கு முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பொலிஸ் நிலையம் அமைப்பதற்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரினால் நாவற்காடு பிரதேசத்தில் காணப்படும் நாவற்காடு பல்தேவைக்கட்டிடம் வழங்கப்பட்டுள்ளதை அறிய கூடியதாக உள்ளது.

குறித்த நாவற்காடு பல்தேவைக்கட்டிடம் அப்பிரதேச கர்ப்பிணி பெண்களுக்கான சுகாதார வைத்திய பரிசோதனை மேற்கொள்ளும் இடமாகவும், அப் பிரதேச மக்களின் பிள்ளைகளின் முன்பள்ளி பாடசாலையாக செயற்பட்டு வந்த இடமாகவும், கிராம சேவையாளரை இலகுவாக அப்பிரதேச மக்கள் சந்திக்கும் இடமாகவும் மற்றும் அப்பிரதேச மாதர் சங்கம் ஒன்று கூடல் இடமாகவும் செயற்பட்டு வந்ததுடன் மேலும் வெள்ள அனர்த்தங்களின் போது பாதிப்புற்ற மக்கள் தங்கும் இடமாகவும் பல வருடங்களாக செயற்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் நிலையம் நிறுவப்படுவது பிரதேசத்தின் அனைத்து பகுதியினதும் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் சிறந்த விடயம் என்பதுடன் பிரதேச அனைத்து மக்களாலும் கோரப்பட்டு வந்த விடயமாகவும் காணப்பட்டது.

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பொலிஸ் நிலையம் மிகவிரைவில் அனைத்து மக்களுக்குமான சேவையினை வழங்க திறக்கப்பட இருக்கின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.