இளந்தளிர் விளையாட்டு கழக மைதானத்திற்கான முதற்கட்ட அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைத்தார் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்!!

(கல்லடி நிருபர்)
மட்டக்களப்பு படையாண்டவெளி இளந்தளிர் இளைஞர் கழக விளையாட்டு மைதானத்திற்கான முதற்கட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று 30.09.2021 வியாழக்கிழமை இடம்பெற்றது.
பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.
இராஜாங்க அமைச்சரின் இரண்டரை இலட்சம்  ரூபாய் பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் குறித்த விளையாட்டு மைதானத்திற்கான அபிவிருத்திப் பணிகள் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளன.
மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சின்னத்துரை புஸ்பலிங்கம், இராஜாங்க அமைச்சரின் பட்டிப்பளை பிரதேசத்திற்கான பிரதான அமைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமாகிய வை.சந்திரமோகன், இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர்கள் மற்றும் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் உள்ளிட்ட கிராம மக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.