சம்மாந்துறை தொடக்கம் கல்முனை வரையான நீர்பாசன பொறியியலாளார் பிரதேச எல்லைகுட்பட்ட பெரும்போக நெல் விதைப்புக்கான ஆரம்பக் கூட்டம்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை தொடக்கம் கல்முனை வரையான நீர்பாசன பொறியியலாளார்  பிரதேச எல்லைக்குட்பட்ட  பெரும்போக நெல் விதைப்புக்கான ஆரம்பக் கூட்டம்   நேற்று (29) காலை  சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில்  அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எச்.எஸ்.என்.சொய்சா சிறிவர்த்தன தலைமையில்  நடைபெற்றது.

இக் கூட்டத்தில் விதை நெல் விநியோகம்,, நீர்ப்பாசனம்,  நெற்செய்கை, வாய்க்கால் பிரச்சினை, மற்றும் கால்நடைகளை வெளியேற்றுதல் போன்ற விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.

இதன் போது விவசாயத்திணைக்களம், நீர்ப்பாசனத்திணைக்களம், கமநல அபிவிருத்தித்திணைக்களம், கால்நடை உற்பத்தி சுகாதாரத்திணைக்களம், விவசாய கமநல காப்புறுதி சபை, வனவளத்திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்கள், உள்ளிட்டவைகளின் கடந்தகாலச்   செயற்பாடுகள், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டன.

அத்துடன் இவ்வருட பெரும்போக விவசாய வேலைகள் 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடுப்பகுதியில் ஆரம்பிப்பது என தீர்மானிக்கப்பட்டது.

இதுதவிர இம்முறை நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளிடம் தரப்படுத்தப்பட்ட விதை நெற்களை செய்கை பண்ணுமாறும் மறுபயிர் செய்கை பன்னுவதற்கு உத்வேகம் வழங்கப்பட்டது.

விவசாயிகளினது சந்தேகங்களுக்கான விளக்கங்களும்,விவசாய தொழினுட்பங்களும் சம்மந்தப்படப்ட அதிகாரிகளால் வழங்கப்பட்டது

இக் கூட்டத்தில்  சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா ,நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம் லத்தீப்,சம்மாந்துறை உதவி  பிரதேச செயலாளர் யு.எம்.அஸ்லம்,சம்மாந்துறை பிரதேச சபை

தவிசாளர் விவசாய குழு தலைவர் ஏ.எம் நெளசாட் ,மாவட்ட நீர்ப்பாசன பணிப்பாளர் சுதத் கமகே,சம்மாந்துறை   விவசாய கமநல சேவைகள் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள், கால்நடை வைத்திய அதிகாரி பிரதேச செயலக அதிகாரிகள், தொழிநுட்ப உத்தியோகத்தர்கள், மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.