பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் நீண்ட காலமாக கடமை ஆற்றிவந்த வைத்தியர் Dr. ஜாரியா இடமாற்றம்: நிலவும் வைத்தியர் வெற்றிடத்திற்கு ஆலையடிவேம்பு பிரதேச மக்கள், வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினர் நிபந்தனை கோரிக்கை!

-கிரிசாந் மகாதேவன்-

அக்கரைப்பற்று பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் நீண்ட காலமாக கடமை ஆற்றிவந்த வைத்தியர் Dr. ஜாரியா அம்மணி அவர்கள் அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுச்செல்கின்றார்.

இதுவரை காலமும் சிறந்த கடமையை ஆற்றிவந்த வைத்தியர் Dr. ஜாரியா அம்மணி அவர்களுக்கு ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் மற்றும் பனங்காடு பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தினர் தங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

இடமாற்றம் பெற்றுச்செல்லும் வைத்தியரின் வெற்றிடத்திற்கு பிறிதொரு வைத்தியர் கடமையை பொறுப்பேற்க உள்ள நிலையில்.

கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனையினால் நிர்வகிக்கபடுகின்ற வைத்தியசாலைகளில் 24 மணி நேரமும் அவசர சிகிச்சைப் பிரிவு ( ETU ) இயங்கி வருகின்றது.

ஆனால் பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் மாத்திரம் இரவு வேளைகளில் வைத்தியர் வைத்தியசாலை வளாகத்தில் கடமையில் இல்லாத நிலை காணப்படுகின்றது. வைத்தியர் இரவு வேளைகளில் வைத்தியசாலை வளாகத்தில் கடமையில் இல்லாமை மிக நீண்ட காலமாக (எட்டு வருடங்கள்) காணப்படுகின்ற நிலை மனவேதனைக்கு உரிய விடயம் ஆகும்.

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் காணப்படுகின்ற மிகவும் பின் தங்கிய கஸ்ரப் பிரதேசங்களில் வாழ்கின்ற ஏழை மக்களின் பிரதான உயிர் நாடியாக காணப்படுகின்ற இவ் குறித்த வைத்தியசாலையில் இரவு வேளைகளில் கண்டிப்பாக ஓர் வைத்தியர் தங்கி இருந்து அவசர நிலைகளில் சிகிச்சை வழங்க வேண்டியது காலத்தின் கட்டாய தேவை ஆக உள்ளது.

என பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு உறுப்பினர் இயன் மருத்துவர் K.ஹரன்ராஜ் அவர்கள் தங்கள் நிலைப்பாட்டினை தெரிவித்து இருந்தார்.

மேலும் 08 வருடங்களுக்கு முன்னர் கடமையாற்றி வந்த வைத்தியர்கள் திரு, திருமதி Dr. அகிலன் அவர்கள் இருந்த காலத்தில் இரவு வேளைகளில் வைத்தியசாலை சிறப்பாக இயங்கி 10 குழந்தைகள் வரை சுக பிரசவம் நடந்தேறியது.

அத்துடன் ஓர் நாள் இரவு அவசர நிலைமைகளில் வந்த ஓர் நோயாளியை ஆம்புலன்ஸ் (Ambulance) சாரதி இல்லாத காரணத்தினால் Dr. அகிலன் ஐயா அவர்களே Ambulance வண்டியை ஓட்டி சென்று அருகில் உள்ள ஆதார வைத்தியசாலைக்கு அழைத்து சென்று உயிர் காப்பாற்றிய சம்பவம் ஒன்றையும் இங்கே சுட்டி காட்ட விரும்புகின்றேன் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

ஆலையடிவேம்பு பின்தங்கிய கஸ்ரப் பிரதேசங்களில் வாழ்கின்ற ஏழை மக்களின் சுகாதார நலனை கருத்தில் கொண்டு பொறுப்புவாய்ந்த உரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மிக விரைவில் மேற்கொள்ளுமாறு பிரதேச மக்கள் மற்றும் வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் கேட்டுக் கொள்கின்றார்கள்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.