விதை இறக்குமதியை நிறுத்தி உள்நாட்டில் தயாரிக்க அரசாங்கம் நடவடிக்கை.

நாட்டில் தேவையான விதைகளை உற்பத்தி செய்யும் இறக்குமதியை நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார்.

நாட்டுக்குத் தேவையான கலப்பின விதைகளை உற்பத்தி செய்வதற்காக பொது மற்றும் தனியார் துறைகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

ஆண்டுதோறும் 28 வகையான விதைகள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுவதாகவும், இதற்காக அரசாங்கம் ஆண்டுக்கு 2000 மில்லியன் ரூபாய் செலவிடுவதாகவும் தெரியவந்தது.

இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட விதைகளின் விலை அதிகம் என்பதால் விவசாயிகள் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

எனவே விதைகள் இறக்குமதியை நிறுத்த விவசாயத்துறையும் தனியார் துறையும் ஒப்புக்கொண்டதாகக் அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே கூறினார்.

மேலும், 100 கிராம் மிளகாய் விதைகள் 1330 ரூபாய்க்கும் 100 கிராம் லீக்ஸ் விதைகள் 2300 ரூபாய்க்கும் 400 கிராம் பீட் விதைகள் 4000 ரூபாய்க்கும் கிடைக்கின்றன என்றும் கூறப்பட்டது.

இந்த விலையில் குறித்த விதைகளை விவசாயிகள் வாங்க முடியாது என்பதால் இறக்குமதியாளர்கள் இந்த விதைகளின் விலையை குறைக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.