இலங்கையில் சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று பெய்து வரும் கடும் மழைக்காரணமாக, சில இடங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை, இரத்தினபுரி, கண்டி, காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கே தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் திடீரென ஏற்படும் நீர் முளைகள், சுவர்களில் விரிசல் மற்றும் மண்ணில் விரிசல் ஏற்படுவதைக் கவனிக்க வேண்டும், ஏனெனில் இவை வரவிருக்கும் மண்சரிவுகளின் அறிகுறிகளாக இருக்கலாம் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்