காந்தி இல்லம் நியூசிலாந்து தமிழ் நிதியத்தினால் ஒட்டுசுட்டானில் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு.

முல்லைத்தீவு -ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவுக்குட்பட்ட கனகரத்தினபுரம்,பேராறு ஆகிய கிராமங்களில் கொவிட் பரவரல் காரணமாக அன்றாட வருமானத்தினை இழந்துள்ள தெரிவுசெய்யப்பட்ட நூறு குடும்பங்களுக்கு, தலா 1550 ரூபாய் பெறுமதியான அத்தியாவசியாவசிய உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில், காந்தி இல்லம் நியூசிலாந்து தமிழ் நிதியத்தின் நிதி அனுசரணையில், வன்னி ஹோப் அவுஸ்ரேலிய நிறுவனம் ஊடாக குறித்த உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

மேலும் கனகரத்தினபுரம் கமக்கார அமைப்பினால் விடுக்கப்பட்ட விசேட வேண்டுகோளின் அடிப்படையிலேயே இந்த இடர்கால நிவாரண உதவிகள் வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்