12-19 வயதுக்குட்பட்டோருக்கான பைசர் (Pfizer) கொவிட் 19 தடுப்பூசிகள் கல்முனையில் !

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணனின் வழிகாட்டலில் நாள் பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட 12-19 வயதுக்குட்பட்டோருக்கான பைசர் (Pfizer)  கொவிட் 19 தடுப்பூசிகள் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை, நிந்தவூர் ஆதார வைத்தியசாலை, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை, கல்முனை ஆதார வைத்தியசாலை போன்ற இடங்களில் வழங்க  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வசீர்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தாமதமின்றி  தடுப்பூசி்யினை பெற தகுதியுடையோர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை, நிந்தவூர் ஆதார வைத்தியசாலை, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை, கல்முனை ஆதார வைத்தியசாலை போன்ற இடங்களில் முற்பதிவுகளை செய்து கொள்ளுமாறு தடுப்பூசி்யினை பெற தகுதியுடையோரை கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்