புகழ் மிக்க எழுத்தாளர் சமூக ஆய்வாளர் உறவாளர் ஜுனைதா ஷரீப்” எம்மை விட்டும் விடைபெற்றார். அவர்கள் நல்ல மூத்த அனுபவசாலி.

மர்ஹூம் ஜுனைதா ஷரீப் அவருடைய சமுதாய பணியை சரியாக செய்து விட்டு மறுமை வாழ்வுக்கு சொல்லாமல் அமைதியாக பிரிந்த செய்தி கலைஇலக்கிய துறையில் மட்டுமல்ல சமூகத்திற்கு பெரும் இழப்பு.
நமக்கெல்லாம் பெரும் கவலை. சின்ன பிள்ளைகள் போன்று பேசுவார்.
நல்ல பணிகளை விட்டுச் சென்றிருக்கிறார். அப்பணிகளை அன்னாரின் வாரிசுகள் தொடர வேண்டும்.
என்றாலும் அல்லாஹ்வின் நாட்டம்.

இவர்கள்  மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் உதவி அரசாங்க அதிபராக அமைச்சுக்களின் செயலாளராக காத்த நகர் முன்னோடியாக இருந்து யுத்த காலத்தில் அர்ப்பணிப்புடன் செயலாற்றியவர். சமூகம் பயன் பெறும் வகையில் பல அரிய தமிழ் நூல்கள் கதைகள் கட்டுரைகள் கவிதைகள் என எழுதிய சேவைச் செம்மல்.
மர்ஹூம் ஜுனைதா ஷரீப் வாழும் காலமெல்லாம் எழுதிக் கொண்டே இருந்த ஆசான். பல சிறப்புப் பட்டங்களுக்கு சொந்தக்காரர்.
எனவே வபாத்தாகி விட்டார்கள். அவருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.
எல்லோருக்கும் நல்ல அறிவுரை சொல்பவர். முக்கியமாக எல்லோரையும் மதிப்பவர். துவிச்சக்கர வண்டியில் வலம்   வருவார். பெருமைத்தனம் இல்லை  என்பேன்.
அவருடைய சிந்தனையெல்லாம் சமூகம் சார்ந்ததாக இருக்கும் என்றால் மிகையாகாது.
மர்ஹூம் அவர்களின் நல்ல தூய பணிகளையும் வல்லவன் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக ஆமீன்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்