மருந்து வழங்குனராக 35 வருட அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றார் ஹனிபா ஹாஜி !

சுகாதார சேவையில் 35 வருட சேவையை வழங்கிவந்த கல்முனையை சேர்ந்த ஹனிபா ஹாஜி என்று பிரபலமான ஏ.எல்.எம். ஹனிபா 01.10.2022 இல் இருந்து தனது 60 ஆவது வயதில் ஓய்வு பெற்றார். பிராந்தியத்திலுள்ள பல்வேறு பொது அமைப்புக்களில் முக்கிய பதவிகளை வகித்துவரும் இவர் சுகாதாரத்துறையில் தனது நேரிய சேவைக்காக பல்வேறு விருதுகளையும், கௌரவங்களையும் பெற்றவராவார்.

கடந்த காலங்களில் சிரிபுற, நாமல் ஓய, நவமெதகம போன்ற கிராமிய வைத்தியசாலைகளிலும், அம்பாறை பொது வைத்தியசாலை, அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை, கொழும்பு மருத்துவக்கல்லூரி, கல்முனை பிராந்திய மருந்து விநியோகப் பிரிவு, ஆதார வைத்தியசாலை நிந்தவூர் மீண்டும் கல்முனை பிராந்திய மருந்து விநியோகப் பிரிவு ஆகியவற்றில் கடமையாற்றிய இவர் மருதமுனை மாவட்ட வைத்தியசாலையில் இறுதியாக சேவையாற்றி கடந்த முதலாம் திகதியுடன் ஓய்வு பெற்றுள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்