சிவனருள் அறநெறி நுண்கலைக் கல்வி செயற்றிட்ட ஆரம்ப நிகழ்வு.

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மத்திய முகாம் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் வாணி அறநெறிப்பாடசாலைக்கு சிவனருள் அறநெறி நுண்கலைக் கல்வி செயற்றிட்ட ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் (05/10/2021) நடைபெற்றது.இன் நிகழ்வானது நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திரு.சோ.ரங்கனாதன் தலைமையில் இடம்பெற்றது.

இன் நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.வி.ஜெகதீசன் அவர்கள் அதிதியாக கலந்துகொண்டார். மேலும் சிவனருள் பவுண்டேசன் செயலாளர் திரு.வே.வாமதேவன், பொருளாளர்.
திரு.க.ஜனார்த்தனன், அம்பாறை மாவட்ட இந்துசமய கலாச்சார உத்தியோகத்தர் திரு.கு.ஜெயராஐ், நாவிதன்வெளி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்களான திருமதி பா.சுஜிவனி,திருமதி வி.நகுலநாயகி,
மற்றும் ஆலய தலைவர் திரு.த.சித்திரகுமார் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினரும், அறநெறிப்பாடசாலை பெறுப்பாசிரியர் அறநெறி ஆசிரியர்கள் மாணவர்கள் ,கலந்துகொண்டனர்.

இதன்படி கட்டிட கட்டுமான பணிகளுக்காக (2,50.000/=) மற்றும் தளபாட உதவிகளுக்கு  (80.000/=) வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செயற்றிட்டமானது அமரர்.வைத்திய கலாநிதி சண்முகசுந்தரம் கதிர்காமசேகரன் அவர்களின் ஞாபகார்த்தமாக சிவனருள் பவுண்டேசனால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்