லொஹான் ரத்வத்தையினால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு…!

அரசியல் கைதிகள் துப்பாக்கிமுனையில் சிறையில் அச்சுறுத்தப்பட்டதாக தொடரப்பட்ட அடிப்படை உரிமை மீறல் இன்று உயர்நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் இரண்டு இடைக்கால உத்தரவினை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
முதலாவதாக அரசியல் கைதிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதோடு இரண்டாவதாக அவர்களின் சட்டத்தரணிகள் சந்திப்பதை தடுக்க கூடாது எனவும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விசேடமாக சட்டத்தரணி கேசவன் சயந்தன்(மு.வ.மா.உ)அவர்களின் பெயர் அரசியல் கைதிகள் சிறைச்சாலையில் சந்திக்க கூடிய சட்டத்தரணியாக பெயர் கோப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு இன்றைய வழக்கில் சட்டத்தரணி பாலேந்திராவின் நெறிப்படுத்தலில் ஜனாதிபதி சட்டத்தரணி திரு.எம் ஏ சுமந்திரன் மற்றும் சட்டத்தரணி கேசவன் சயந்தன் மற்றும் சட்டத்தரணி ஜெயசிங்கம் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.மேலும் குற்றம்சாட்டப்பட்ட எதிராளிகளில் ஒருவர் சார்பாக மாத்திரமே இன்று சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணி(State counsel) முன்னிலையாகி இருந்தார்.

இவ் வழக்கின் அடுத்த கேட்பானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21ம் திகதி எடுத்துக் கொள்ளப்படவிருக்கின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்