நாங்கள் தொடரந்தும்முன்னிறுத்தும் அரசியல் நடைமுறையை வலியுறுத்தியுள்ள இந்தியா: குருசுவாமி சுரேந்திரன் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடக பேச்சாளர்…

 

13வது அரசியல் அமைப்பின் முக்கியத்துவம் தமிழ் தேசியக் கட்சிகளின் ஒருமித்த நிலைப்பாடும் ஒன்றுபட்ட குரலின் அவசியமும் நேற்று 04-10-2021 இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திரு ஷிரிங்லா தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களிடமும் மற்றைய தமிழ் கட்சிகளிடமும் இந்த விடயங்களை உறுதிபடத் தெரிவிப்பு.

13 வது அரசியல் அமைப்பு திருத்தத்தை முழுதாக நிறைவேற்றுவதை ஆகக் குறைந்த நல்லிணக்க கோரிக்கையாக இலங்கை அரசிடம் தமிழர் தரப்பு முன்வைப்பது ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைக்கு வழியாகும் என நாம் கூறியபோது பல விமர்சனங்களை சில ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால் இன்று இந்தியா அதை வலியுறுத்தியுள்ளதன் மூலம் தமிழருக்கான எதிர்கால எலக்குகளை எட்டும் அரசியல் பாதை இது தான் என்பதை உணர்த்தியுள்ளது.

கடந்தகால கோரிக்கைகளின் மீள்பதிவு நினைவு படுத்தலுக்காக இணைக்கப் பட்டுள்ளன. 20 ஏப்ரல் 2021″ மாகாண சபை முறைமையை அரசியல் யாப்பில் இருந்து நீக்கிவிட வேண்டும் என்ற முழுவீச்சோடு பேரினவாத அரசாங்கங்கள் முயற்சி செய்து வருகின்றன.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக கொண்டுவரப்பட்டமையால் இந்தியாவினுடைய நேரடி அழுத்தத்தின் காரணமாக 13ம் திருத்தம் காப்பாற்றப் பட்டு வருகிறது. இந்தியாவை பகைத்துக் கொள்ள விரும்பாமல் அல்லது முடியாமல்இ அதே நேரம் தமது முயற்சியும் கைகூடாமல் அரசு கைகட்டி நிற்கிறது. இழுத்தடிப்பு செய்தாவது நடைமுறைப் படுத்தாமல் காலம் தாழ்த்துவதன் மூலம் பயனற்றுப் போக வைக்கும் செயலாகவே இதை நாம் கருதுகிறோம்.

எமது தேசிய இனத்தின் கோரிக்கைகளுக்கு தீர்வாக இந்த மாகாண சபை முறைமை இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் போராட்ட அமைப்புகளின் தியாகத்திலும் இந்தியாவினுடைய முயற்சியாலும் இலங்கையின் அரசியல் சாசனத்தில் பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்தினூடாக உள்வாங்கப்பட்ட முக்கிய அரசியல் அம்சமாக இது கருதப்படுகிறது. வடக்கு கிழக்கை எமது பூர்வீக பிரதேசமாகவும் தமிழை தேசிய மொழியாக ஆட்சி மொழியாக அங்கீகரித்த இந்த ஏற்பாட்டை தமிழ் மக்கள் இழந்து விடமுடியாது. நிரந்தர தீர்வு கிடைக்கும் வரையான தற்காலிக தளமாக இது பேணப் படவேண்டும்.

காலாகாலமாக வந்த அரசுகளுடன் அரசியல் தீர்வு சம்பந்தமாக நடத்தப்பட்ட பல பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறவில்லை. அதே போல இப்பொழுது அரசு முன்வைத்திருக்கின்ற புதிய அரசியல் சாசனத்திற்கான நிபுணர்கள் குழுவிடம் பல்வேறு அரசியல் தீர்வினை தமிழர் தரப்புகள் முன்வைத்திருக்கிறன. ஏற்கனவே அரசியல் சாசனத்தில் உள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக எந்த அரசுகளும் நிறைவேற்றாத நிலையில்இ அரசியல் தீர்விற்கான ஆலோசனைகள் நிறைவேற்றப்படுமா அல்லது கருத்தில் கொள்ளப்படுமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

அப்படியான தீர்வினை எட்டும் வரைக்கும் இ ஆகக் குறைந்த பட்சமாக கருதக்கூடிய மாகாணசபை முறைமையை பேணுவதற்கும்இ தமிழ் இனம் எதிர்கொண்டிருக்கும் அபாயகரமான நிலையை தடுப்பதற்கும், விரைந்து மாகாண சபை தேர்தலை நடாத்துவது அவசியம்.

“ஆகஸ்ட் 11 2021″ஆகக் குறைந்த பட்சம் அரசமைப்பில் இருக்கும் 13ஆவது திருத்தச்சட்டத்தை முற்றுமுழுதாக நிறைவேற்றி மகாணசபைகளுக்கான அதிகாரங்களை நிரந்தரமாக்குவதன் மூலமே ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைக்கு வழி கோல முடியும் என்று ரெலோ கருதுகிறது. நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையிலும் அரசியல் யாப்பில் ஏற்படுத்தக்கூடிய சிறிய திருத்தங்களின் மூலமும் இதை அரசு நிறைவேற்ற முடியும். அதற்கான சகல தகுதிகளுடனும் பலத்துடனும் இன்று அரசு இருக்கிறது. சாதாரண பெரும்பான்மையே போதுமானது. இதற்கு இதயசுத்தியுடன் அரசு செயல்பட வேண்டியதே தேவையானது.

இந்த செயல்பாடு நல்லெண்ண நடவடிக்கையாக அரசு மேற்கொள்ளுமானால் பேச்சுவார்த்தைக்கான சாதகமான சூழ்நிலையை அது ஏற்படுத்தும். இது புதிய விடயமே அல்ல. ஏற்கனவே அரசியல் யாப்பில் இருக்கக்கூடிய எமது உரிமையை தான் நிறைவேற்ற நாங்கள் கோருகிறோம்.

இதனடிப்படையில் தமிழர் தரப்பு ஒருமித்து செயலாற்றும் அவசியம் எனத்தின் நலனுக்கான வரலாற்றுத் தேவையாக உள்ளது என்பதை உணர வேண்டும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.