வௌிநாட்டவர்களின் விசாக்களுக்கான செல்லுபடிக்காலம் நீடிப்பு.

நாட்டிலுள்ள வௌிநாட்டவர்களின் அனைத்து வகையான விசாக்களினதும் செல்லுபடிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் 07 ஆம் திகதி முதல் நவம்பர் 06 ஆம் திகதி வரை செல்லுபடிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, மே மாதம் 11 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காலாவதியாகும் விசாக்களுக்கு குறித்த காலப்பகுதிக்கான விசா கட்டணம் மாத்திரம் அறவிடப்படும் என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்