அரசாங்கம் எம்மிடம் காணப்படும் உள்ளூராட்சி சபைகளையும் குறைந்தபட்ச அதிகாரங்களையும் ஆளுநரின் தலையீட்டின் மூலம் இயங்க விடாமல் தடுக்கின்றது – சபையில் சாணக்கியன்

அரசாங்கம் எம்மிடம் காணப்படும் உள்ளூராட்சி சபைகளையும் குறைந்தபட்ச அதிகாரங்களையும் ஆளுநரின் தலையீட்டின் மூலம் இயங்க விடாமல் தடுக்கின்றது – சபையில் சாணக்கியன்

அரசாங்கமானது அவர்களது ஆளுகைக்கு உட்படாத பிரதேசங்களிலுள்ள எம்மிடம் காணப்படும் உள்ளூராட்சி சபைகளையும் குறைந்தபட்ச அதிகாரங்களையும் ஆளுநரின் தலையீட்டின் மூலம் இயங்க விடாமல் தடுக்கின்றது
என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

இன்றைய தினம் பாராளுமன்றத்தில். 13வது சட்டத் திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வினை பற்றி நாம் கதைத்துக் கொண்டிருக்கும் அதேவேளை அரசாங்கமானது அவர்களது ஆளுகைக்கு உட்படாத பிரதேசங்களிலுள்ள எம்மிடம் காணப்படும் உள்ளூராட்சி சபைகளையும் குறைந்தபட்ச அதிகாரங்களையும் ஆளுநரின் தலையீட்டின் மூலம் இயங்க விடாமல் தடுக்கின்றனர். அதற்கான உதாரணம் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளரின் அதிகாரத்திற்கு உட்படாத தலையீட்டினால் பல பிரச்சனைகளை அவ் சபையானது முகம் கொடுத்து வருகின்றது மற்றும் வாழைச்சேனை உள்ளூராட்சி சபையையும் இப்படியான பிரச்சனைகள் காணப்படுகின்றன. நாம் நீதியை மதித்து நீதிமன்றம் சென்று அதற்குரிய தீர்ப்பைப் பெற்றாலும் சம்பந்தப்பட்டவர்கள் அதனை பொருட்படுத்தாது தீர்ப்பையும் மதியாது செயற்படுகின்றனர். இதனால் பாதிக்கப்படுவது எமது மக்களே இவ் குறைந்த பட்ச அதிகாரங்களுடனே எம்மை செயல்பட விடாமல் தடுக்கும் இவ் அரசானது எமக்கான சுயநிர்ணயத்தை எவ்வாறு பெற்றுத்தர போகின்றது. வெளிநாடுகளில் இவ் அரசானது கதைக்கும் விடயம் வேறு இங்கு நடைமுறைப்படுத்தும் விடயங்கள் வேறாக காணப்படுகின்றது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்