மட்டக்களப்பு மக்களுக்கான அறிவித்தல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அடிக்கடி பெய்து வருகின்ற மழையினால் டெங்கு நோய் பரவுவதற்கான வாய்ப்பு அதிகளவில் காணப்படுவதாக சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர்.

மக்கள் தமது ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்த முடியும்.

அரசு மற்றும் சுகாதார திணைக்களத்தினரும் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

வீடுகளில் நீர் தேங்கி நிற்கும் இடங்களை உடனடியாக துப்பரவு செய்து நீர் தேங்காத வகையில் சரிசெய்து கொள்ள வேண்டும்.

வீடுகளில் வசிக்கும் குழந்தைகள் வயோதிபர்கள் மற்றும் ஏனையோரின் பாதுகாப்பு கருதி வீட்டு சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கொவிட் முடக்க நிலை காரணமாக நீண்ட நாட்களாக இயங்காமல் இருந்த அலுவலகங்கள், பாடசாலைகள், வழிபாட்டுதலங்கள், பொதுச்சந்தைகள் மற்றும் அனைத்து பொது இடங்களையும் சுத்தம் செய்த பின்னரே மக்கள் பாவனைக்கு உட்படுத்துவதற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அடிக்கடி பெய்து வருகின்ற மழையினால் நீர் தேங்கி டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயம் காணப்படுவதினால் மக்கள் அவதானத்துடன் செயற்படுவது மிகமிக அவசியமாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.